Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இரு கட்சிகளுக்கிடையில் மோதல் – ஒருவர் காயம் – ஒருவர் கைது – மூவர் தப்பியோட்டம்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கு இடையில் 07.05.2018 அன்று மோதல் சம்பவமொன்று நோர்வூட் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மற்றும் தலவாகலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு கட்சிகளில் மே தினக் கூட்டங்களை அடுத்து, இரண்டு தரப்பினரும் பேரூந்துகளில் மீண்டும் வீடு திரும்பிய நிலையிலேயே இந்த மோதல் சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் மூவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மோதல் சம்பவத்தின் போது, இரண்டு தரப்பினரும் பயணித்த பேரூந்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அட்டன் நீதவான் முன்னிலையில் 08.05.2018 அன்று முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலை நடாத்தி தப்பிச் சென்றதாக கூறப்படும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments