Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழ்தேவி உலகில் மிகச் சிறந்த ரயில் பயணங்களில் ஒன்றாக தெரிவு


கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான யாழ்தேவி ரயில் சேவையே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.உலகில் மிகச் சிறந்த 18 ரயில் பயணங்களில் இலங்கையிலுள்ள ‘யாழ்தேவி’ ரயில் பயணமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டன் கார்டியன் நாளிதழ் உலகின் மிகச் சிறந்த ரயில் மார்க்கங்கங்களை அண்மையில் பட்டியலிட்டிருந்தது. அதில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.யாழ்தேவி பயணத்தில் முதலாம் வகுப்பு, 2ஆம் வகுப்பு பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவுகளை செய்துகொள்ள முடியும்.
ஆனால் இணையத்தின் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாதெனவும் லண்டன் கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் குறித்த பயணத்தின்போது பசுமையான இயற்கை காட்சிகளையும் கோயில்களையும் காணும் வாய்ப்பு காணப்படுவதாகவும் லண்டன் கார்டியன் நாளிதழில் குறிப்பிட்டுள்ளது.(15)yaal-devi

Post a Comment

0 Comments