Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து – சுற்றுலா பயணிகள் அவதானம்


இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.
இதன்காரணமாக ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு யாரும் செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.Rawana Ella Water Fall (3) Rawana Ella Water Fall (4)

Post a Comment

0 Comments