Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

2020இல் நான் ஓய்வு பெற மாட்டேன் : ஜனாதிபதி மைத்திரி


2020இல் தான் ஓய்வு பெற மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் நான் ஓய்வு பெறுவேனா என சிலர் கேட்கின்றனர். ஆனால் நான் 2020இல் ஓய்வு பெறப்போவதில்லை. எனக்கு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. நேர்மையான அரசியல் தலைவர்கள் எத்தனை பேர் இந்த நாட்டில் இருக்கின்றனர். எமக்கு புதிய அரசியல் வேலைத்திட்டம் வேண்டும். இதற்கு கொலையாளிகள் , ஊழல்காரர்கள் தேவையில்லை. எமக்கு நேர்மையான தலைவர்கள் வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments