மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்த 5வருடங்களில் 7400 மில்லியன் ருபா கல்வி அபிவிருத்திக்காக ஓதுக்கப்பட்டுள்ளது- கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ;ணன்
புதிய நல்லாட்சி அரசாங்கம் கல்விக்காக பல கோடிகளை ஓதிக்கி சாதனை செய்துள்ளது. பிரதமர் கல்வியில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். மாணவர் காப்புறுதி மற்றும் கட்டாயகல்வி என பல திட்டங்கள். பல பாடசாலைகள் அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை எனும் திட்டத்தின் கிழ் வருகின்ற ஜீன் மாதம் 1 திகதி தொடக்கம் ஓரு மாத காலத்திற்கு தேசிய ரீதியில் அபிவிருத்தி செய்யப்படடவுள்ளன என
மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் தேசியப் பாடசாலையின் கனிஷ;ட பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று பாடசாலை அதிபர் திருமதி.க.சுபாகரன் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாககல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ;ணன் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்
கௌரவ அதிதியாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரும் மற்றும் சிறப்பு அதிதிகளாக மட்டு வலயக் கல்விப்பணிப்பாளர்; கே.பாஸ்கரனும் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்; திருமதி.சாமினி ரவிராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் சிறப்பாக திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன் கலைகலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலை சமுக்தினால் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவிக்க ப்பட்டார். ஆசிரியர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்; கலந்து கொண்டனர்.



0 Comments