Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பட்டிருப்பு தேசிய பாடசாலை ,களுவாஞ்சிகுடி தரம் இரண்டு மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சித்திரை புத்தாண்டு சிறுவர் விளையாட்டு விழா

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு தேசிய பாடசாலை ,களுவாஞ்சிகுடி தரம் இரண்டு மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சித்திரை புத்தாண்டு சிறுவர் விளையாட்டு விழா நிகழ்வுகள் இன்று ( 4 ) பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பபிரிவு பகுதித்தலைவர் திருமதி அன்னலட்சுமி தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா ,பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன், ரீ.ஜனேந்திரராஜா ,எம்.சுவேந்திரராஜா, பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.லோகநாதன் ,சிரேஸ்ட ஆசிரியர்கள், தரம் இரண்டு பிரிவு ஆசிரியைகள், பெற்றோர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தேசியக் கொடியினையும், பிரதி அதிபர் என்.நாகேந்திரன் பாடசாலை கொடியினையும் ஏற்றி வைத்தனர்.
சிறுவர்களுக்கிடையில் முட்டியுடைத்தல், யானைக்கு கண் வைத்தல், தேசிக்காய் சமநிலையோட்டம் ,.பலூன் உடைத்தல் ,கயிறுழுத்தல் போன்ற விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தரம் இரண்டைச் சேர்ந்த சகல சிறுவர்களுக்கும் அதிதிகளினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.






Post a Comment

0 Comments