Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் மரணம்!

வடமராட்சிப் பகுதியில் இன்று காலை மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்தனர். கரணவாய் கிழக்குப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும், மகனும் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண நகரில் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகநாதன் (வயது- 50), சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments