Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொது வேட்பாளரை தெரிவு செய்யும் முயற்சிகள் ஆரம்பம்!


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக யாரைக் களம் இறக்கலாம் என்பதைப் பற்றித் திரைமறைவில் இரகசியப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டிவரும் புத்திஜீவிகள் குழுவொன்றே இந்தப் பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.


அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவரை அடுத்த ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளராக களமிறக்க ஆலோசிக்கப்படுவதாக அறியமுடிகின்றது. இவர்களில் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கே கூடுதலான ஆதரவிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்பட்ட முக்கியமான அரசியல் பிரமுகர்கள் மங்களவையே விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments