Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதான வீதி வளைவில் லொறியும் காரும் விபத்து

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராங்குளம் பகுதியில் கார் மற்றும் லொறி வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தாங்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்..,

கல்முனை பகுதியிலிருந்து மூதூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகன சாரதி தூக்க நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த காரில் மோதியுள்ளதாகவும், இவ்விபத்தில் காரில் பயணித்த 35 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவருவதாகவும் காத்தாங்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





Post a Comment

0 Comments