எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சையில் இருந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மூன்று மணித்தியால வினாப் பத்திரத்திற்காக இந்த மேலதிக கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
இம்முறை பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளது. இவ்வாறான நடைமுறை பெரும்பாலான நாடுகளில் இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.வி.சனத் பூஜித தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த சனிக்கிழமை கல்வியமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வேலைத்திட்டம் கபொத சாதாரண தர பரீட்சைக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)
0 Comments