Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

17ஆம் திகதி பகிஷ்கரிப்புக்கு திட்டமிடும் பஸ் சங்கங்கள்! பஸ் கட்டண மாற்றம் நாளை அமைச்சரவை வருகிறது


எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அது தொடர்பான யோசனை சமர்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கிணங்கள் நாளைய தினம் அமைச்சரவையில் அந்த யோசனை முன்வைக்கப்பட்டு அங்கேயே எவ்வளவு ரூபாவினால் கட்டணத்தை அதிகரிப்பது என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளது.

பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்காவிட்டால் 17ஆம் திகதி முதல் சேவை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோமென பஸ் சங்கமொன்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments