இன்று நள்ளிரவு முதல் ஹொக்ரெயின் 92 ரக பெற்றோல் 137 ரூபாவாகவும் , 95 ஹொக்ரெயின் ரக பெற்றோல் 148 ரூபாவாகவும் , ஓட்டோ டீசல் 109 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும், மண்ணெண்ணை 101 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
இருப்பினும் மண்ணெண்ணை 1 லீற்றர் 44 ரூபாவிற்கு கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி பயனாளிகள் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் இதற்கான நிவாரண அட்டை விநியோகிக்கப்படுவதுபோன்று பெருந்தோட்டதுறையினருக்கும் இந்த வகையில் அட்டை விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)


0 Comments