கம்பகா- அத்தனகல, நிட்டம்புவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தார். பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் தேவாமித்த, ஹெய்யந்தெடுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகரொருவரே உயிரிழந்துள்ளார்.
|
காயமடைந்த நால்வரும் வதுபிட்டியவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லை.
|
0 Comments