Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயரும் கடல் அலை! சில நாட்களுக்கு தொடரும்


எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை வரை பல பகுதிகளில் கடல் அலை உயரும் சாத்தியம். இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கையில் . எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை புத்தளத்தில் இருந்து கொழும்பு காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் இரண்டு தசம் ஐந்து மீற்றர் முதல் 3 தசம் 5 மீற்றர் வரை கடல் அலை உயரலாம் என்று தெரிவித்தார்.

கடலில் காணப்படும் அலை அதிகரிப்புக் காரணமாக கொழும்பு, காலி பிரதான பாதையில் ஹிக்கடுவ பிரதேசத்திலும் காலி மாத்தறை பிரதான பாதையின் ஹபராதுவ மற்றும் உணவட்டுண பிரதேசத்திலும் நீர் பெருகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி பிராந்திய உதவிப் பணிப்பாளர் லெப்ரினன் கேணல் சம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு 7.30 அளவில் ஹிக்கடுவ பிரதேசத்தின் பிரதான பாதைக்கு கடல் அலை பெருக்கம் ஏற்பட்டதால் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து இப்பிரதேசங்களில் தடைப்பட்டதாகவும் என;றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார். -(3)

Post a Comment

0 Comments