Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மோட்டார் சைக்கிளுடன் சிக்கியது கஞ்சா! - கொண்டு சென்றவர்கள் ஓட்டம்

யாழ். நாயன்மார்கட்டு பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது நேற்று மாலை 7.30 மணியளவில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பொலிஸார் பிடிக்க முற்பட்ட போது அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். தப்பிச் சென்றவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், இது தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments