மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று (13) காலை முச்சக்கரவண்டி ஒன்றில் குறித்த சட்ட விரோதமான மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்றப்போதே பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.இதன்போது முச்சக்கரவண்டி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து முழு மதுபான போத்தல்கள் 13 மற்றும் அரை போத்தல்கள் 48யை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்றும், நாளையும் மதுபான விற்பனைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments