வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் இன்று பதவியேற்றுள்ளார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மத்திய மாகாண ஆளுநராக நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் வடமாகாணத்திற்கு புதிய ஆளுநர் இன்று அதிகாலை வரை நியமிக்கப்பட்டிருக்கவில்லை.
|
இந்த நிலையிலேயே ரெஜினோல்ட் குரே மீண்டும் வடமாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
|
0 Comments