Home » » சம்பந்தனின் பதவிக்கு மீண்டும் ஆபத்து?

சம்பந்தனின் பதவிக்கு மீண்டும் ஆபத்து?

அரசாங்கத்தில் வெளியேறிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் தனிக்குழுவாக இயங்கவுள்ளதாகவும் இதனால், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவி வகிக்க முடிதெனவும் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர்.
அதேவேளை மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும், சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாதென கூறியுள்ளனர்.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சர்ச்சை ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே வெளியேறிய 16 உறுப்பினர்களுடன், ஒரே கட்சியைச் சேர்ந்த 70 பேர் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர். இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி, தனிக்கட்சியாக பெரும்பான்மை உறுப்பினர்களுடன், எதிர்க்கட்சி விரிசையில் உள்ள கட்சி ஒன்றுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறிய 16 பேரும், கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 54 பேரும் கூட்டுச் சேர்ந்து அல்லது தனித்தனியாக பெரும்பான்மைய நிரூபித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடிதென கூறப்படுகின்றது.
ஏனெனில் இவர்கள் அனைவரும் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள். ஆகவே ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களில் ஒரு பகுதி அரசாங்கத்துடனும் மற்றை பகுதி எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடிதென அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே 15 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பதற்கு தகுதியுடையவர் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை அரசியல் காரணங்களின அடிப்படையில் 54 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சிக்கு அல்லது 16 பெரைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனிக்குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவியை சபாநாயகர் வழங்கினால், சட்ட ரீதியான முறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, சம்பந்தன் உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை வெளியேறிய 16 உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயற்படப்போதில்லை என்றும் ஸ்ரீனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு, ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதேவேளை 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தற்போது 15 பேர் மாத்திரமே உள்ளனர். வன்னி மாவட்ட உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் தனித்து இயங்குகின்றார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான சர்ச்சை ஒன்றும் ஏற்பட்டுள்ளமை சம்பந்தனுக்கு மற்றுமொரு நெருக்கடி என விமர்சகா்கள் கூறுகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |