Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மன்னாரில் அகழப்பட்ட மண்ணில் பற்கள், எலும்புத் துண்டுகள்!

மன்னார்- லங்கா சதோச விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழப்பட்ட மண்ணில் இருந்து பற்கள் மற்றும் எலும்புத் துண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நகர நுழைவாயிலில் பகுதியில் இயங்கிய லங்கா சதோச விற்பனை நிலையம் முழுமையாக உடைக்கப்பட்டு அங்கு புதிய கட்டடம் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அங்கு அகழப்படும் மண் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எமிழ் நகரைச் சேர்ந்த ஒருவரும் அந்த மண்ணைக் கொள்வனவு செய்திருந்தார். அதை தனது வீட்டுக்குக் கொண்டு சென்று கொட்டியபோது அதில் சந்தேகத்துக்கு இடமான எலும்பு எச்சங்கள் வெளிவந்துள்ளன. அது தொடர்பில் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்றுமுன்தினம் தடவியல் நிபுணர்கள் அந்த இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். மன்னார் நீதிவான் மற்றும் சிறப்பு சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் விசாரணைக்காக அந்த இடத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
நேற்று மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் முன்னிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. அதில் எலும்புத் துண்டுகள் பற்கள் என்பன மீட்கப்பட்டன. இரவு 7.45 மணியளவில் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றும் அகழ்வுப் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments