Advertisement

Responsive Advertisement

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் போராட்டம்!

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சிவன்கோயிலுக்கு முன்பாக நேற்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கேடயம் எனும் அரசியல் உரிமைகளுக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பொது மக்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரியும், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

Post a Comment

0 Comments