Advertisement

Responsive Advertisement

மே 1 அரச விடுமுறை இல்லை


சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ஆம் திகதி நடத்தப்பட வேண்டிய தொழிலாளர் தின நிகழ்வுகளை மே 7ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் 1ஆம் திகதி வழங்கப்படவுள்ள அரச விடுமுறை தினத்தை 7ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

29ஆம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வெசாக் வாரத்திற்கு மேதின நிகழ்வுகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தினால் அன்றைய விடுமுறை தினத்தை 7ஆம் திகதிக்கு மாற்றி பிரகடனப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி மே 1ஆம் திகதி பேரணிகள் , கூட்டங்கள் எதுவும் நடத்தப்படாது. -(3)

Post a Comment

0 Comments