Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடமாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் வானிலை தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.வளிமண்டவியல் திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையில்,
சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.வடமாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக சுமார் 75 மில்லிமீற்றர் மழை சில இடங்களில் பெய்யக்கூடும்.கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும்.மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம் காணக்கூடும்.மன்னாரிலிருந்து புத்தளம் வரையான கடற்கரையோர பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.ஏனைய கடற்கரையோரங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசும் என்றும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

Post a Comment

0 Comments