முதல் இனிங்சில் இந்திய அணிக்கு கிடைத்த சாதகதன்iமையை சிறப்பாக பயன்படுத்தி தென்னாபிரிக்க அணியை 220 ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்தியிருந்தால் அது எங்களிற்கு வெற்றிவாய்ப்பை அளித்திருக்கும் என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே கோலி இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

முதல் இனிங்ஸில் எங்களிற்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் ஏபிடிவிலியர்சின் அதிரடிக்கு பின்னரும் நாங்கள் அவர்களை 220 ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்தியிருந்தால் அது எங்களிற்கு சாதகமாக அமைந்திருக்கும்
தொடர்ச்சியாக விக்கெட்களை இழப்பதை தவிர்க்கவேண்டும் நான்கு நாட்களும் நாங்கள் எங்களிற்கு சாதகமான நிலை காணப்பட்டது உண்மை.
இன்று நாங்கள் இரண்டாவது இனிங்ஸில் 270 ஓட்டங்கள் வரை பெறவேண்டியிருக்கும் என நினைத்தோம் ஆனால் அதனை விட குறைவான இலக்கையே துரத்தவேண்டிய நிலையை எங்கள் பந்து வீச்சாளர்கள் ஏற்படுத்தினார்கள் அது சிறப்பான விடயம். ஆனால் எங்கள் துடுப்பாட்ட வீராகளில் எவராவது 75- 80 ஓட்டங்களை பெற்றிருக்கவேண்டும் 25 30 ஓட்டங்களை பெறுவது போதுமானதல்ல
தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களிற்கு பாராட்டுகளை தெரிவிக்கவேண்டும் ஒரு பந்து வீச்சாளர் குறைவாகயிருந்தபோதிலும் அவர்கள் சிறுதும் சோர்வடையாது பந்து வீசினார்கள் நாங்கள் எங்கள் தவறுகளை சரிசெய்யவேண்டும் அடுத்தடுத்து விக்கெட்களை இழப்பதை தவிர்க்கப்பார்க்கவேண்டும்- இணைப்பாட்டங்கள் அவசியம் என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

0 Comments