தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிணை முறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதியை கோரி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை பகல் அங்கு சென்ற ரவி கருணாநாயக்க குறித்த அறிக்கையின் பிரதிகளை கோரி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் காணப்படும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கும் வகையிலேயே தான் அந்த அறிக்கையின் பிரதிகளை கோரியுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் காணப்படும் விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்படும் போது தன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்லவெனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 Comments