பிரான்ஸின் மார்செலி துறைமுக நகரின் முக்கிய புகையிரத நிலையத்தில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் குறிப்பிட்ட நபரை ரோந்துநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என பிராந்திய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் கத்தியால் குத்துவதற்கு முன்னர் அல்லாகு அக்பர் என சத்தமிடடார் என தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட நபர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதியை காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து விலகியிருக்குமாறு கோரியுள்ளனர்.
0 Comments