கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக கடந்த 26ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
21 வயதுடைய ரோஹிங்யா அகதி யுவதியொருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்கு இடமளிக்காது அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் ஒத்துழைப்புடனேயே அன்றைய தினம் அந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அகதிகள் இதற்கு முதல் மீரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த பெண்ணை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பாக பாதுக்க பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் குறித்த பெண்ணுடன் இருந்த மற்றைய அகதியொருவரினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததுடன் அது தொடர்பான அடுத்த வழக்கு இம்மாதம் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி அந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்களும் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அகதிகளை நாட்டைவிட்டு விரட்டியடித்து குறித்த வழக்கிற்கு சாட்சிகள் இல்லாது செய்வதே அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாக இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. -
Home »
எமது பகுதிச் செய்திகள்
» ரோஹிங்யா அகதி பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் : ஆர்ப்பாட்டத்தின் பின்னணி வெளியானது
ரோஹிங்யா அகதி பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் : ஆர்ப்பாட்டத்தின் பின்னணி வெளியானது
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: