Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை VS பாகிஸ்தான் – நேரடி ஒளிபரப்பு ‘ஐ’ அலைவரிசை ஊடாக ஒளிபரப்பப்பட மாட்டாது…

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளது நேரடி ஒளிபரப்பானது இம்முறை நேத்ரா அலைவரிசை (Eye Channel)ஊடாக ஒளிபரப்பப்பட மாட்டாது என சியத அலைவரிசையானது (Siyatha Channel) ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்புச் செய்யும் உரிமை குறித்து அண்மைக் காலமாக தொலைக்காட்சி அலைவரிசைகள் இடையே கடும் போட்டி நிலைமைகள் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் சியத தொலைக்காட்சி அலைவரிசைக்கு குறித்த வாய்ப்பு கிட்டியுள்ளது எனலாம். அதன்படி, இம்மாதம் 28ம் திகதி அதாவது நாளை(28) நடைபெறவுள்ள போட்டி தொடக்கம் எதிர்வரும் மாதம் 29ம் திகதி வரையில் நடைபெறும் போட்டிகளான டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 ஆகிய போட்டிகள் சியத தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் 02, ஒருநாள் போட்டிகள் 05 மற்றும் T-20 போட்டிகள் 03 நடைபெறவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி நாளை(28) இலங்கை நேரப்படி காலை 11.30க்கு அபூதாபியில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments