Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வித்தியாவின் படுகொலை வழக்கில் யாரேனும் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமது உயிருக்கு ஆபத்து -வித்தியாவின் குடும்பத்தார்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபர்களில் ஒருவரைக்கூட விடுதலை செய்யக் கூடாதென வித்தியாவின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கு விசாரணைகளின் போதே பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இவர்களில் யாரேனும் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் விடயத்தில், அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளும் செல்வாக்கு செலுத்தியுள்ளமை, விசாரணைகளின் போது வெளியாகியிருந்தது. இந்நிலையில், எந்த செல்வாக்கையும் பயன்படுத்தி இவர்கள் விடுவிக்கப்படக் கூடாதென வித்தியாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, தமக்கு ஏற்பட்ட நிலை இனி எந்தவொரு பெற்றோருக்கும் ஏற்படக் கூடாதென தெரிவித்துள்ள வித்தியாவின் பெற்றோர், அதனை கருத்திற்கொண்டு சட்டம் தன் கடமையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.(1

Post a Comment

0 Comments