ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைதீர்மானத்திற்கு ஆதரவளித்தமைக்காக அணுவாயுதங்களை பயன்படுத்தி ஜப்பானை மூழ்கடிக்கப்போவதாக எச்சரித்துள்ள வடகொரியா அமெரிக்காவை சாம்பலாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது
வடகொரியாவின் உறவுகள் மற்றும் பிரச்சாரத்திற்கு பொறுப்பாகவுள்ள கொரியா ஆசியா சமாதான குழு என்ற அமைப்பே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வடகொரியாவின் அரச முகவர் அமைப்பு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையையும் கடுமையாக விமர்சித்துள்ளது.பாதுகாப்பு சபையை தீமையின் கருவி என அழைத்துள்ள வடகொரியா பாதுகாப்பு சபை அமெரிக்காவின் உத்தரவின் பேரில் செயற்படும் பணத்திற்கு அடிமையான நாடுகளை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜப்பான் இனிமேலும் எங்களிற்கு அருகில் இருக்க கூடாது என வடகொரிய அமைப்பு தெரிவித்துள்ளது.
0 Comments