Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மலேசிய தலைநகரில் தீ விபத்தில் 25 மாணவர்கள் பலி

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இஸ்லாமிய பாடசாலையொன்றில் நிகந்த தீ விபத்தில் 25 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
மின்சார கசிவு காரணமாக தீபரவியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாமிய புனிதநூலை கற்பிப்பதற்கான பாடசாலையொன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மூன்றுமாடி கட்டிடத்தில் மாணவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையே இந்த விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
23 மாணவர்களும் இரண்டு அதிகாரிகளும் பலியாகியுள்ளதாக இவர்கள் அனைவரும் 13 முதல் 17 வரையான வயதிற்கு உட்பட்வர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளள.
உடல்களை கணக்கெடுத்துக்கொண்டிருக்கின்றோம் உடல்கள் ஓன்றின் மீது ஓன்றாக காணப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments