இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நூற்றுக்கு நூறு வீத வரி விதிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமது அறுவடையை விற்பனை செய்வதில் உள்நாட்டு பெரிய வெங்காய விவசாயிகள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி எதிர்காலத்தில் நூற்றுக்கு நூறு வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.
0 Comments