Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எதிர்கால மலையக மாற்றம் இளைஞர் கைகளில் விடப்படுகிறது

எதிர்கால மலையக மாற்றம் இளைஞர் கைகளில் விடப்படுகிறது என பெருமிதம் தெரிவிக்கும் அமைச்சர் பழனி திகாம்பரம், அடுத்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் ஒட்டு மொத்த பிரதேச சபை, நகர சபைகளை எமது இளைஞர்கள் ஆட்சி ஏற்று கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் முதலானவற்றை அகற்றி, சமூகத்தில் பலம் மிக்க அமைப்பொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்தில், “திகா மன்றம்” எனும் புதிய அமைப்பொன்று, ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
“ஒரு புதிய மாற்றத்துக்கான ஆரம்பம்” என்ற தொனிப்பொருளில் அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நேற்று (17) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவர் உரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார்.
மலையகத்தை மாற்றம் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் செய்து வருகின்றோம்.
சிலர் நானே மலையக தலைவன் எனக் கூறி கொண்டு கருப்பு கண்ணாடியை அணிந்த வண்ணம் நாம் செய்யும் சேவைகள் என்னவென்று தெரியாது முடிந்தால் தனியாக வா என சவால் விடுகின்றார்.
ஆனால் எதையுமே செய்யக் கூடிய நிலை தடுமாறிய நிலையில் யாருடன் போவது எண்ண செய்வது என்று அறியாமல் சாவல் விடுத்து வருவதை வேடிக்கையாக எண்ணுவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments