Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பட்டிருப்பு காக்காச்சிவட்டை விஷ்ணு வித்தியாலயத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் க.பொ.த. உயர்தரம் ஆரம்பம்

1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு வித்தியாலயத்தில், 1996 தொடக்கம் க.பொ.த.சாதாரணதரம் இருக்கின்றது. சாதாரண தரத்தில் சித்தியடையும் பல மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தூர இடம்செல்ல வேண்டியதாலும்,தங்களது பெற்றோரின் வருமானம் போதாதமையினாலும்,கல்வியை இடையில் விட்டுவிடுவதுண்டு. 2016 ஆம் ஆண்டு சாதாரணதரத்தில் 17 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு சித்தியடைந்திருந்தும் அங்கு உயர்தரம் ஆரம்பிப்பதற்கு அதிகாரிகள் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இவை எனது கவனத்திற்கு ஊர்மக்களாலும்,அந்த ஊரில் பிறந்து எருவிலில் வழர்ந்து தற்போது பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரான தம்பி கருணாகரனாலும் கொண்டுவரப்பட்டதினால், அப்பாடசாலையின் அதிபர் தம்பி ஜீவானந்தராசவின் அயராத ஒத்துளைப்புடன் , மாகாண கல்வி அதிகாரிகளுடன் ஏற்படுத்தப்பட்ட நீண்ட விவாதங்களுக்கு பின்பு அங்கு க.பொ.த.உயர்தரம் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு நேற்று சம்பிரதாயபூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது. இதில் கோட்டக்கல்வி அதிகாரி பாலச்சந்திரன் கொடுத்த சிபார்சுக் கடிதம் மிகவும் உதவியாக இருந்தது.







Post a Comment

0 Comments