வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வீடமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க தாம் முன்னின்று செயற்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஐா தெரிவித்துள்ளார்.
அதற்காக தற்போதைய காலம் உதயமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னேடுத்துள்ளதாக மாவை சேனாதிராஐா குறிப்பிட்டார்.
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் தற்போதைய காலத்தில் வீடமைப்பு வசதிகள் அற்று இருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதி நிதிகளுடனான சந்திப்பு நேற்று யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின் அதன் தலைவர் மௌலவி சுபியான் தலைமையில் நடை பெற்றது..
குறித்த சந்திப்புக்கு பிரதம அதிதியாக தழிழ் தேசிய கூட்;டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய சோ.மாவை சேனாதிராஐா,ஈ.சரவணபவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்;.
குறித்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்;.எமது தலைவரின் எண்ணக்கருவிற்கு அமைய நாம் தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினை காட்டிகாத்து வருகின்றோம்.
அதற்காக நாம் ஒன்றினைய வேண்டும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறித்த நிகழ்வில் முஸ்லிம் மக்களின்
0 Comments