Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் தற்கொலையின் வீதம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது நாளொன்றிற்கு 8 பேர் மரணிக்கின்றனர்



இலங்கையில் சாராசரியாக 3 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்குச் சுமார் 8 பேர் தன்னுயிரை மாய்க்கின்றனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“தன்னுயிரை மாய்த்து கொள்பவர்களில், ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர். பொலிஸ் அறிக்கைத் தகவல்களின்படி, இந்த வருடம் முதல் 6 மாத காலப்பகுதியில் 1,597 தற்கொலைகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையில் 1,275 பேர் ஆண்கள் என்றும், 322 பேர் பெண்கள் என்றும் அறிய முடிகின்றது. 

இதேவேளை, இது குறித்து சுகாதார அமைச்சு அதிகாரிகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

1995ஆம் ஆண்டு 8,500 பேர் எனப் பதிவாகியிருந்த தற்கொலைகள், 2005இல் அரைவாசிக்கும் மேலாகக் குறைந்து, 2015இல் 3,025 என்ற எண்ணிக்கைக்கு கீழிறங்கியுள்ளது. 

ஆயுத முரண்பாடுகள் இடம்பெற்று வந்த கடந்த இரு தசாப்தங்களில், வருடாந்தம் தற்கொலை சத வீதத்தை அரைவாசிக்கும் அதிகமாகக் குறைக்க முடிந்துள்ளது. 

தற்கொலை செய்து கொள்ளும் மனப்போக்கை மாற்றுவதற்கு இளைஞர்களை மையப்படுத்தி சுகாதார அமைச்சின் உளவள ஆற்றல் சேவைகள் பிரிவால் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் உளவள ஆற்றல் சேவைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவருகின்றது. 

Post a Comment

0 Comments