அமெரிக்க போர் விமானம் ஒன்றை வடகொரியாவின் ஏவுகணை தாக்கி அழிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அந்நாடு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த புகைப்படமானது வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானம் சுக்கலாக வெடித்துச் சிதறுவது போன்று காட்டப்பட்டுள்ளது.
ஆனால் அது போலி எனவும், அதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய வெளிவிவகார அமைச்சர் டிரம்ப் அரசை எச்சரித்த அடுத்த நாளே இதுபோன்ற ஒரு புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் படைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன.
எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடிக்க அமெரிக்க ஜனாதிபதி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டார் என்பதை காட்டும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவும், வட கொரியாவும் சமீப காலமாக சொற்போரை நடத்தி வருகின்றன. இதனால் பதட்டம் அதிகரித்து வருகிறது.
வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவும், வட கொரியாவும் சமீப காலமாக சொற்போரை நடத்தி வருகின்றன. இதனால் பதட்டம் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா தன்னை தற்காத்து கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால், வட கொரியாவை முற்றிலும் அழித்துவிடும் என்று செவ்வாய்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தில் பேசிய ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டுமின்றி வடகொரியா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு கண்டனம் தெரிவித்து தலைநர் பியாங் யாங்கில் உள்ள கிம் டூ சங் சதுக்கத்தில் நேற்றைய தினம் லட்சக் கணக்கானோர் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர். அப்போது, அமெரிக்காவிற்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

0 Comments