மட்டக்களப்பு – உப்புக்கராச்சி பகுதியிலுள்ள வீட்டில் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த வைத்தியரை அப்பகுதி மக்களும் இளைஞர்களும் சுற்றிவளைத்துள்ளனர்.
நேற்று இரவு வேளையில் உப்புக்கராச்சி, லயன்ஸ் கழக வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் திரிவதை கண்ட அப்பகுதி இளைஞர்கள், குறித்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதன்போது அந்தபெண் ஒரு வீட்டிற்குள் சென்று கதவை சாத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியை சுற்றிவளைத்த இளைஞர்கள் அது தொடர்பில் சிவில் பாதுகாப்பு குழு மற்றும் பொலிஸார், கிராம சேவையாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிஹகவத்துற தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பெருமளவான இளைஞர்கள் திரண்டதுடன் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புபட்ட வைத்தியரும் குறித்த பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
.

















0 Comments