சிறிய மற்றும் இலத்திரனியல் ரக கார்களுக்கான வரியைக் குறைப்பது தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர கவனம் செலுத்தியுள்ளார்.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படவுள்ளன.
பசுமைச் சுற்றாடலை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த நிதியமைச்சர் மங்கள சமரவீர உத்தேசித்துள்ளார்.
அத்துடன் வரிக்குறைப்பின் மூலமாக விலைகளையும் குறைத்து சிறிய ரக மற்றும் இலத்திரனியல் ரக கார்களை பொதுமக்கள் மத்தியில் கூடுதலாகப் பயன்படுத்தும் சூழலை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.


0 Comments