|
வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கு பதில் அளிக்காமல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தப்பி ஓடிய சம்பவம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று மாலை வவுனியாவில் அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை திறந்து வைத்தார்.
|
இதன்போது, நிரந்தர நியமனம் கோரி தொடர்ச்சியாக போராடி மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கைவிட்டிருந்த சுகாதார தொண்டர்கள் தமது நியமனம் தொடர்பில் கேட்டுக் கொள்வதற்கும், மகஜர் ஒன்றினை கையளிப்பதற்கும் முயன்ற போது சுகாதார அமைச்சர் ராஜித, அவர்களை சந்திக்காமலும், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காதும் உடனடியாக வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார்.
|


0 Comments