Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிமன்றம் அவசியம்! - ஜெனிவாவில் சிவாஜிலிங்கம்

இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தின் ஊடாக புலப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் ஒன்று அவசியம் என்று வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னிலையில் சமர்பித்த யோசனைக்கு அமைய இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை வழங்கவில்லை. மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் அவசியம் குறித்து தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்த்திருப்பதாக சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் யுத்தக் குற்றம் புரியப்பட்டமை தொடர்பாக தம்மிடம் முக்கிய சாட்சிகள் இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதனை ஒரு விசேட காரணியாக கொள்ள முடியும். ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட 30 உறுப்பினர்கள் படைத்தரப்பில் யுத்தக் குற்றம் புரிந்துள்ளதாக சரத் பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் அதற்கு இரண்டு தினங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில் யுத்த வீரர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப் போவதில்லை தெரிவித்தார். இதுதான் இன்றைய முக்கிய நிலைப்பாடாக உள்ளது.
எனினும் இறுதியாக தமிழ் மக்களுக்காக சர்வதேச விசாரணைக்கான நீதிமன்றம் ஒன்று அவசியம் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments