கண்டி ரயில் நிலையத்தில் பிரயாணிகளுக்கு வழங்கப்படும் கடுகதி ரயில் கட்டண டிக்கற் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த ரயில் நிலையத்தில் டிக்கட்டுகள் முன்பதிவு செய்யும் இடத்தில் குறிப்பிட்ட ரயில் சேவைகளுக்கான முன்பதிவுகள் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் நபரொருவர் முன்பதிவு டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தமையை தனியார் ஊடக செய்திப் பிரிவொன்று ஆதார வீடியோவுடன் தகவல்களை வெளியிட்டிருந்தது.
இதன்படி குறித்த நபர் 1000 ரூபா டிக்கட்டுக்களை 3000 ரூபாவுக்கு விற்று வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்திலுள்ள சுற்றுலா பயணிகளுக்கு தகவல் வழங்கும் பிரிவிலுள்ள சிலரின் உதவியுடன் அந்த நபர் செயற்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதன்படி குறித்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தும் ரயில்வே திணைக்களம் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் பிரிவையும் தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -


0 Comments