முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி கஹவத்தை பகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் பிரமலால் ஜயசேகர உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் உண்மைகளை மறைத்தமை சம்பந்தமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், கடும் நிபந்தனைகளுடன் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments