க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளைய தினத்துடன் முடிவடையவுள்ள நிலையில் நாளைய தினம் பரீட்சை முடிவடைந்த பின்னர் வீதிகளிலும் , பொது இடங்களிலும் அநாகரிகமாக நடந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறாக நடந்துக்கொள்ளும் மாணவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் நாளைய தினம் பொது அறிவு பரீட்சை நடைபெறவுள்ளதால் சகல மாணவர்களும் அந்த பாடத்தில் தோற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments