Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் தேசிய சாதனை

வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார்.இதேவேளை இப்போட்டியில், கிழக்கு மகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஏ.ஏ. கருணாவன்ச, 3.10 மீற்றர் உயரம் தாவி 2 ஆவது இடத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த கே.எஸ். பேரேரா 3.00 மீற்றர் உயரம் தாவி 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 43 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை மாத்தறை, கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.
போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்தார்.அவர் இவ்வருடத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக 4 ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.(15)1

Post a Comment

0 Comments