க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக புதிதாக 9 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு முதல் சகல பாடசாலைகளுக்கும் இந்த பாட திட்டம் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிரதான பாடங்களுக்கு மேலதிகமாக உயர்தர வகுப்புக்குறிய இரண்டு வருட காலத்தில் முதல் 6 மாதங்களில் இந்த பாடதிட்டங்களை மாணவர்கள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் செயற்திரனை விருத்தி செய்யும் நோக்கிலேயே இது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த பாடத்திட்டங்கள் வருமாறு
1.முதல் மொழி (சிங்களம் அல்லது தமிழ்)
2. ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்துதல்
3. அழகியல் உற்சாகத்துடன் தொடர்புடைய திறன்
4. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப திறன்கள்
5. குடியுரிமை தொடர்பான திறன்கள்
6. சமூக நல்வாழ்வுக்கு தேவையான ஆரோக்கியமும் வாழ்க்கைத் திறனும்
7. தொழில் திறன்கள்
8. விளையாட்டு மற்றும் பிற விடயங்களுடன் தொடர்புடைய செயற்பாடுகள்
9. தொழில் வழிகாட்டல் திட்டங்கள்
0 Comments