Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பைச் சேர்ந்த 28 பேரை நாடு கடத்தியது இந்தோனேசியா!

சட்டவிரோதமாக படகு மூலமாக நியூசிலாந்துக்கு செல்வதற்காக, இந்தோனேசியாவில் தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28 பேர் நேற்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்ய மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்ற நீதிவான் சிலனி சத்துரந்தி உத்தரவிட்டார். இதேவேளை, பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்கவேண்டும் என்று பிணை கோரிக்கை விடுத்த நீதிவான், சந்தேகநபர்களை 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டார்.

Post a Comment

0 Comments