இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என பேராசிரியர் போல் நியுமன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 72வது அமர்வில் கலந்து கொண்ட போது பேராசியர் இந்த கருத்தினை நேற்று தெரிவித்தார்.
|
“ இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. முன்னேற்றமான செயற்பாடுகள் எதுவும் இல்லை. மனித உரிமைகள் சபையினால் வழங்கப்பட்ட இரண்டு வருட நீடிப்பில் ஏற்கனவே 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும், தீர்மானங்களின் முக்கிய இலக்குகளை அடைவதில் முன்னேற்றம் மந்தகதியில் காணப்படுவதுடன் அது முற்றிலும் ஒரு அடித்தளமாகவே உள்ளதென தோன்றுகின்றது.
இலங்கையின் இடைக்கால நீதித்துறையை நிறைவேற்றுவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதல்ல. இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களின் குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் கொண்டு வருவதற்கு சிறிய சான்றுகள் உள்ளது.
பொது மன்னிப்பு என்ற பெயரில் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் கணிசமான அளவினர் புனர்வாழ்வு திட்டத்திற்கு திசை திருப்பப்பட்டுள்ளனர், எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நம்பிக்கைகளுக்கு ஒரே அடிப்படையாக கொண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது சித்திரவதைக்கு முறையான பயன்பாடுகளை ஊக்குவிக்கின்றது.
அனைத்து சமூகங்களும் புறக்கணிக்கப்படுவதோடு, துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைப்பது இலக்காக உள்ளது. விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரும் தடுத்து வைக்கப்படுதல் மற்றும் சித்திரவதை ஆபத்தில் உள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத, தீர்மானத்தின் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த வேண்டும் என்பதற்கமைய இலங்கை நிபந்தனையற்ற முறையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் வெளிப்படுத்தப்படாத சித்திரவதை மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என பேராசியர் போல் நியுமன் மேலும் தெரிவித்துள்ளார்.
|
0 Comments