வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறும் சாரதிகளுக்கான தண்டப்பணத்தை 25000 ரூபா வரை அதிகரிக்கும் சட்டம் இன்னும் செயற்படுத்தப்படவில்லையென வீதி பாதுகாப்பு தொடர்பாக தேசிய சபை தெரிவித்துள்ளது.
அந்த சட்டத்தில் சில விடயங்கள் தொடர்பாக தவறுகள் இருப்பதாகவும் இதனால் அவற்றை திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்படி அது வரை அந்த சட்டம் செயற்படுத்தப்படாது எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சாரதிகள் மீதான குற்றச்சாட்டுகள் சிலவற்றுக்கான தண்டப்பணத்தை 25000 ரூபா வரை அதிகரிக்கும் வகையில் அண்மையில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments