அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, கிழக்கு மாகாண சபையில், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். “கிழக்கு மாகாண சபையின் முடிவை, சகல மாகாணங்களும் எதிர்பார்த்துள்ளன. அதேபோல, எமது மாகாண மக்களும் எதிர்பார்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
0 Comments