Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 6000 பேரின் விபரங்கள் - ஜனாதிபதியின் கவனத்துக்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 6,000 பேர், தொடர்பிலான விவரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம் என்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் செயற்பாட்டாளர் எஸ். அரியமலர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போதே,மேற்படி விவரங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், “அசாதாரண சூழ்நிலை நிலவிய காலப்பகுதியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் போகச் செய்தல், மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி, ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments